Live Radio - Listern to Tamil Songs

Nam Kural - Urakach Sollungal / Published News / சினிமா

Tuesday, March 17, 2009

Villu Press Meet - Angry Vijay


Nevr seen before, angry tamil actor Vijay... Not on screen, but off screen in a press meet...
இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான்.

சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.

சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் புரமோனல் டூர் போனார்கள் அல்லவா...

அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.

குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.

'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.

ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்.

நன்றி: தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment